×

பிளஸ்-2 பொதுத்தேர்வில் தாராபுரம் பொன்னு மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை

தாராபுரம்,மே14: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பொன்னும் மெட்ரிகுலேஷன் பள்ளியின் பிளஸ் -2 தேர்வை மொத்தம் 217 மாணவ மாணவிகள் எழுதினர். இவர்களில் 217 மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்று 100% வெற்றி சாதனை படைத்துள்ளனர். இவர்களில் ஜெயராணி என்ற மாணவி தமிழ் பாடத்தில் 99 மதிப்பெண்களும் ஆங்கிலத்தில் 98,இயற்பியலில் 100, வேதியியலில் 100, தாவரவியலில் 99, கணிதவியலில் 100 ஆக மொத்தம் 600க்கு 596 மதிப்பெண்களை பெற்று பள்ளியில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

இதே போல் இப்பள்ளி மாணவி பி.தீபிகா 600க்கு 595 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், ஆர். வித்தியாசரி என்ற மாணவி 600க்கு 590 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
கணித பாடத்தில் ஒரு மாணவரும், இயற்பியல் பாடத்தில்ல் இரண்டு மாணவர்களும், வேதியியல் பிரிவில் 12 மாணவர்களும், கணக்கு பதிவியலில் எட்டு மாணவர்களும், வணிகவியல் துறையில் இரண்டு மாணவர்களும், கணினி அறிவியலில் 19 மாணவர்களும், கணினி பயன்பாடுகள் பிரிவில் 17 மாணவர்களும் பாடங்களின் வாரியாக நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.மொத்த மதிப்பெண் பட்டியலில் 590க்கு மேல் மூன்று மாணவர்களும், 580க்குள் 9 மாணவர்களும், 570 முதல் 579 குள் 24 மாணவர்களும், 560 முதல் 569 வரை 16 மாணவர்களும், 550 முதல் 559 மதிப்பெண்கள் வரை 17 மாணவர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.

சாதனை படைத்த பொன்னு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் மாணவ மாணவிகளுக்கு பள்ளியின் தாளாளர் மனோன்மணி ஆறுச்சாமி, நிர்வாக அறங்காவலர்கள் ராமசாமி, தலைவர் எஸ்.மோகன், பள்ளி தலைமை ஆசிரியர் மணியரசன், ஆசிரியர்கள், அலுவலக பிரிவு ஊழியர்கள் தங்களது பாராட்டு, வாழ்த்துக்களை தெரிவித்து வெற்றி கோப்பைகளை வழங்கினர்.

The post பிளஸ்-2 பொதுத்தேர்வில் தாராபுரம் பொன்னு மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை appeared first on Dinakaran.

Tags : Tarapuram Ponnu Matric School ,Tarapuram ,Tarapuram Ponnum Matriculation School ,Tirupur ,Tarapuram Ponnu Matriculation School ,Dinakaran ,
× RELATED மது பாட்டிலில் மிதந்த பூச்சி, கொசு